சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

2022 G.C.EO/L பரீட்சை முடிவுகள்; பரீட்சை திணக்களத்தின் விசேட அறிவிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவார்கள்? கல்வி அமைச்சரின் தகவல்

2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள்
இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகள் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ், அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ் பரீட்சார்த்திகளுக்கும் மீள் மதிப்பீட்டுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயன்பாட்டிற்கான பரீட்சை சான்றிதழ்களுக்கு இன்று (01) முதல் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் நாடளாவியரீதியில் , 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

பரீட்சைக்கு தோற்றியவர்களுள் , 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 78,103 தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram