சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – குறைக்கப்படும் மின்சார கட்டணம்

எதிர்வரும் ஜனவரி மாதம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி மூலம் மின்சார சபைக்கு கிடைத்துள்ள நன்மைகள் காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்கட்டண திருத்தமானது ஏப்ரலில் மேற்கொள்ளவிருந்தாகவும் தொடர் மழை காரணமாக ஜனவரி மாதத்திலேயே இந்த திருத்தம் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யோசனைகள்
அத்தோடு, குறித்த திருத்தம் மேற்கொள்வதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் யோசனைகளும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram