சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

யாழில் வாகனவிபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் வாகனவிபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று இரவு (21.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பட்டாரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டவேளை எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இருவர் பலத்த காயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram