புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

வடக்கு கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பகிர: Facebook WhatsApp X Telegram
மட்டக்களப்பு கடற்பரப்பில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேவேளை, பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடுமென திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்று
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram