ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
Srilanka

“சீறும் புலிகள்“- பிரபாகரனின் வாழ்க்கை- படமாக்கப்படுகிறது!!

பகிர: Facebook WhatsApp X Telegram
“சீறும் புலிகள்“- பிரபாகரனின் வாழ்க்கை- படமாக்கப்படுகிறது!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது.

இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். வெங்கடேஷ்குமார் இயக்குகிறார். ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பட வெளியீடு தொடர்பாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் என்று அனைத்தையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பை காட்டுப்பகுதிகளில் நடத்துகின்றனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே பிரபாகரன் மகன் பாலசந்திரன், விடுதலைப்புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா ஆகியோரின் கதைகளும் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்