வவுனியாவில் வைத்தியரால் பாலியல் துன்புறுத்தல் செய்யபட்ட யுவதியின் அதிர்ச்சி வாக்குமூலம்-அம்பலமான குறுந்தகவல்கள்(படங்கள் )

பாலியல் குற்றச்சாட்டில் கைதான வைத்தியர் இவ்வாறு செயற்பட்டாரா?

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய வைத்தியரின் உறவினர்கள் முறைப்பாட்டினை மீளப்பெற 10 லட்சம் ரூபா வழங்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணொருவர் நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை வைத்தியர் அங்கு பணிபுரியும் பெண்ணை பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார்.

அதையடுத்து குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியமையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் வைத்தியரை கைது செய்த பொலிஸார் மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்திய சமயத்தில் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் (22.06) குறித்த வைத்தியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

10 லட்சம் ரூபாய் பணமும் பொலிஸ் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய வைத்தியர் பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை மீளப்பெறுமாறு பாலியல் குற்றாச்சாட்டுள்ளாகிய வைத்தியரின் உறவினர்கள் தமது உறவினர்களிடம் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

குறித்த வைத்தியர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அனுப்பிய குறுந்தகவல் வெளியாகியுள்ளன. குறுந்தகவலின் மேல்பகுதியில் உள்ள அவரது தொலைபேசி இலக்கம் நீக்கப்பட்டுள்ளது. இவ் குறுந்தகவல் சான்றுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like