மீண்டும் வருவர் பிரபாகரன்…. ஆர்ப்பாட்டத்தில் குரல் (படங்கள்)

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என்று கோசம் எழுப்பியதால் சற்று பரபரப்பு நிலவியது.

கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் , பொது மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.

சங்கானை பிரதேச செயலகம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நகர்ந்து சென்று பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like