சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் சிராந்தி!

பகிர: Facebook WhatsApp X Telegram
மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் சிராந்தி!

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க மகிந்த அணி திட்டமிட்டுவதாக முன்னணி சிங்கள பத்திரிகையான அனித்த செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ஆதரவு பொதுஜன பெரமுண கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும் பணிகளை முன்னெடுத்தது.

எனினும் அந்தக் கட்சியின் அண்மைக்கால முன்னெடுப்புக்களை வைத்து அனித்த பத்திரிகை இந்த தகவலை இன்று தனது பிரதான செய்தியாக இதனை வெளியிட்டுள்ளது.

விக்டர் ஐவனின் ராவய பத்திரிகையில் பணியாற்றிய முன்னணி மூத்த பத்திரிகையாளர்களால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அனித்த சிங்கள பத்திரிகை, சிறிது காலத்திலேயே பிரபலமடைந்துள்ளது.

இலங்கை அரசியலின் போக்கை துள்ளியமாக வெளிக்கொண்டுவரும் அந்தப் பத்திரிகையின் இன்றைய தலைப்புச் செய்தி தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்