திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Srilanka

எலி எச்சங்களுடன் உணவுப் பொருள்கள்- வர்த்தகருக்கு தண்டம்!!

பகிர: Facebook WhatsApp X Telegram
எலி எச்சங்களுடன் உணவுப் பொருள்கள்- வர்த்தகருக்கு தண்டம்!!

சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அண்மையில் எழுதுமட்டுவாழ் பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை நடாத்தினர்.

அவ்வேளையில் உசன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் எலி எச்சங்களுடன் உணவுப் பொருள்கள் வைத்திருந்தமை, எலிகளால் கடியுண்ட அரிசிமாப் பொதிகளை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விற்பனைத் திகதி காலாவதியான தேயிலை மற்றும் ஜெலி வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமை போன்ற மூன்று குற்றச்சாட்டுக்களுடன் வர்த்தகருக்கு எதிராக எழுதுமட்டுவாழ் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 3 குற்றங்களுக்கும் தலா 3 ஆயிரம் ரூபா வீதம் 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டது .

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்