பீர் வாங்க முதலையுடன் கடைக்குள் சென்ற நபர் – (வீடியோ)

செல்ல பிராணிகள் வளர்ப்பது பிரச்சனை அல்ல, ஆனால், அந்த பிராணிகளால் சுற்றி இருக்கும் நபர்களுக்கும், அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

அக்கறையுடன் வளர்க்க வேண்டும். செல்ல பிராணிகளை குழந்தைகள் போல வளர்ப்பவர்களும் ஏராளாமானோர் இருக்கிறார்கள்.

வாக்கிங் என்று மட்டுமில்லாது, சிலர், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போதும், ஷாப்பிங் செல்லும் போதிலும் கூட செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஆனால், ஃப்ளோரிடாவை சேர்ந்த ஒரு இளைஞர், தான் வளர்க்கும் முதலை குட்டியை காரில் உடன் அழைத்து சென்றது மட்டுமின்றி. ஒரு சூப்பர் மார்கெடிற்குள் பீர் வாங்க அந்த முதலையுடன் நுழைந்து மற்றவர்களை அச்சுறுத்தியும், கேலி செய்தும் விளையாடி இருக்கிறார்.

இதனால், ஷாப்பிங் செய்ய வந்த சிலர் பயந்து ஓடியதாகவும் அறியப்படுகிறது. முதலையை வைத்து விளையாட்டு காட்டி அச்சுறுத்திய அந்த இளைஞரின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.