யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இதனை கடிதம் மூலம் பேராசிரியருக்கு அறிவித்துள்ளார்.
எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து...
நீர்கொழும்பு தாக்குதல் தொடர்பில் வெளியான பகீர் காணொளி
நீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் இன்று உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீ மூட்டப்பட்டுள்ளது.
தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிலர் இந்த வன்முறைச் சம்பவத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த பதற்ற நிலைமையடுத்து...
நீர்கொழும்பில் பெரும் பதற்றம்! வாகனங்களுக்கு தீ வைப்பு! அதிரடி படையினர் குவிப்பு
நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ...
கொக்குவில் இந்துவில் வாள் மீட்பு
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று நடத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள்...
கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்
கொழும்பின் எல்லைக்குட்பட்ட வான் பரப்பில் பறந்த ட்ரோன் கமராவினால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - ஜாவத்தை பிரதேசத்தின் வானில் அனுமதியின்றி பறந்த ட்ரோன் கமராவுக்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ட்ரோன் கமரா...
யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கைக் கடிதம்
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக்...
அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கட்சி உறுப்பினரின் வீட்டில் திடீர் தீவிர சோதனை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினராக நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரும் நொச்சிமோட்டை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான அப்துல் ரசூக் முகம்மது லரீப் என்பவரின் பட்டக்காடு 2ஆம் ஒழுங்கையிலுள்ள...
யாழ். பிரதான படைத்தலைமையகம் ஒன்றில் சரமாரியாக துப்பாக்கி வேட்டு!
யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி வேட்டுகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிது நேரம் இந்த துப்பாக்கி வேட்டுகள் வெடித்ததாகவும், அதன் சத்தங்களை நன்கு உணர முடிந்ததாகவும்...
யாழில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைது
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்த சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது பல்கலைக்கழக...
கொழும்பை சுற்றியுள்ள பாலங்களை தகர்க்க பாரிய திட்டம்!! பொலிஸாரின் முக்கிய கோரிக்கை..
கொழும்பிலுள்ள பாலங்களை தகர்ப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என பொலிஸாரை மேற்கோள்காட்டி ஏஎவ்பீ செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைதுசெய்யப்படாமலிருக்கின்றனர் எனவும் பொலிஸார்குறிப்பிட்டுள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பாலங்களை தகர்ப்பதற்கான...