Tuesday, April 24, 2018

கட்டிப்பிடித்தால் தப்பா ? நாங்கள் அப்படித்தான் செய்வோம்  ?., புதிய முறையில் போராட்டம் செய்த மாணவர்கள்..!

கட்டிப்பிடித்தால் தப்பா ? நாங்கள் அப்படித்தான் செய்வோம் ?., புதிய முறையில் போராட்டம் செய்த மாணவர்கள்..!


சென்னை: ஆண், பெண் நட்பை சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் கொச்சைப்படுத்துவதாக கூறி மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை ஐஐடியில் மாணவ-மாணவிகள் பாலின வேறுபாடு மறந்து பழகுவது வழக்கம். சமீபத்தில் மாணவன் ஒருவர் தனது தோழியை கேண்டீனில், கட்டிபிடித்து வழியனுப்பி வைத்தபோது, அதை ஆய்வக அலுவலர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். மேலும் இது தவறு இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள கூடாது என அவர் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.இது குறித்து மாணவர்கள் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் ஐ.ஐ.டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே நிர்வாகத்தின் அணுகுமுறையை கண்டித்து ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் கட்டிபிடித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்தக் கலாச்சாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை என கூறியுள்ளனர்

அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லாதீர்கள், இரவு வெளியே போக வந்து கேட்டால் யாரையும் வெளியில் விடாதீர்கள் என்று நிர்வாகம் அறிவுறுத்துவதாக மாணவர்கள் கூறியுனர். இதனால் ஐ.ஐ.டி வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் வாசிக்க
துல்கர் சல்மானுடன் அந்த 4 பேரு யாரு?

துல்கர் சல்மானுடன் அந்த 4 பேரு யாரு?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், என்று சொன்னது போய்,

தனக்கென திரைத்துறையில் ஒரு தனியிடம் பிடித்துள்ளார். தமிழில் 'வாயை மூடி பேசவும் படம் மூலம் அறிமுகம் ஆனார். அவரின் குழைந்தை போன்ற சிரிப்புக்கு தமிழில் ரசிகைகள் அதிகம்.மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி நடித்த பின்பு திரைத்துறையில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை அமைத்து கொண்டார். தற்போது மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். படத்தின் பெயர் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இப்படம் குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில் , '' இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த பெயர் பொருத்தமானது. என்றார்.மேலும் இந்த படத்தில் துல்கர் சாமானுக்கு 4 ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கவுள்ளனர். அதில் நிவேதா பெத்துராஜ், ஷாலினி பாண்டே என 2 ஹீரோயின்கள் மட்டும் இப்போதைக்கு ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் 2 ஹீரோயின்களுக்கான தேர்வு நடக்கிறது. இந்த படத்தை மலையாளத்திலும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும் வாசிக்க
கழிப்பறை கட்டுவதை கூட தமிழனிடம்  இருந்து திருடிய ஐரோப்பியர்கள்..! திட்டமிட்டு மறைக்கப்படும் வரலாறு.. அதிகம் பகிருங்கள்

கழிப்பறை கட்டுவதை கூட தமிழனிடம் இருந்து திருடிய ஐரோப்பியர்கள்..! திட்டமிட்டு மறைக்கப்படும் வரலாறு.. அதிகம் பகிருங்கள்
சோழர்களது கண்டுபிடிப்புகள் எக்கஜக்கம், அரசோ ஆராய மறந்தது..! நாம் நம் வரலாற்றை ஆராய்ந்தால் மட்டுமே நம் இனத்தை பற்றிய அரிய தகவல்கள் கிடைக்கும்..

அவர்கள் கூறி சென்ற பலவற்றை ஆராய்ந்து பார்க்காமலே மூட நம்பிக்கை என்று சொன்னோம்..

உதாரணத்திற்கு,
அன்று மழை வர ஹோமம் செய்தார்கள், எதற்கு ஏன்..? ஆராய்ந்து பார்க்காமலே மூட நம்பிக்கை என்று கூறி விட்டோம்..

அதன் பின் உள்ள அறிவியல் நம் எத்துனை பேருக்கு தெரியும்..?

ஹோமத்தில் அரிசி மற்றும் பசு நெய் ஊற்றுவார்கள்..நமக்கு இது நன்றாகவே தெரியும்.. 

இதனால் என்ன..?

அரசி மற்றும் பசு நெய் ஒன்றாக நெருப்பில் எரியும் போது உருவாகும் ஒருவிதமான வாயு இயற்கையாக மேகத்தில் உள்ள ஈரப்பதத்தை ஒருங்கிணைத்து மழையை பெய்ய செய்கிறது..இன்று தான் நமக்கு தெரியும் சில்வர் அயோடைடு செயற்கையாக மேகத்தில் தூவி மழை உருவாக உதவுகிறது என்று..

ஆனால் நம் முன்னோர்களுக்கு அன்றே தெரிந்துள்ளது..இது போன்று நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் செய்ய வில்லை..அரசு மறந்தது..?

பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால்,

உலக நாகரீகங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது.2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

ஆனால் ஆராய்ந்தால் பல அதிசயம் காத்திருக்கிறது என்று இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர் கூறினார்..

சமீபத்தில் கூட,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், சோழர் காலத்தில் பயன்படுத்திய உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், கோயிலிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ளது..அதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட உறை கிணறுகளைத் தொல்லியதுறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், எதையும் தொல்லியல் துறையினர் வெளியில் சொல்வதில்லை. இதை ஆய்வு செய்ததுமில்லை.


சோழ வம்சத்தின் முக்கியமான மன்னர் ராஜேந்திர சோழன். அவர் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த ஊர், ஜெயங்கொண்டம்.

அடுத்ததாக உலகமே வியக்கும் கரிகால சோழன்..அந்த காலத்தில் ஏது கல்லை ஒட்டும் பசைகள்..?? எப்படி உருவாக்கினர், அது இன்னும் தாங்குதே.!


ஆக மொத்தம் சோழர்கள் விஞ்ஞானிகளாகவே இருந்துள்ளனர்..

கடந்த வருடம் திறந்த வெளி கழிப்பறை அற்ற மாநிலாமாக சிக்கிம், கேரளா தேர்வு செய்யபட்டு இருந்தது..

தற்போது கூட அரசு திறந்த வெளி கழிப்பறை அற்ற மாநிலத்தை உருவாக்க பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது..


ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழன் கழிப்பறை கட்டினான், என்பது தமிழனாகிய நமக்கே தெரியாது..இது நம்முடைய தவறு இல்லை..

அரசு நமது பண்பாட்டை ஆய்வு செய்ய மறுக்கிறது..கீழடி அகழ்வாராய்ச்சியில் எத்துனை இடர்பாடுகள்..?

சரி, இந்த கழிப்பறையை வடிவமைத்து கட்டியவர்கள் யார்..? அதே சோழ விஞ்ஞானிகள் தான்..

9ஆம் நூற்றாண்டு

கழிப்பறையை ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை. இலங்கையில் சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில் (நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி சனநாதமங்கலம்- பழமையான கழிப்பறைகள்) இருந்ததை பார்த்து அதை போன்றே அவர்களது நாட்டில் கட்டியுள்ளனர்..


நாமோ அவர்களிடம் இருந்து வந்தது என்று நினைத்து கொண்டிருக்கிறோம்..
மேலும் வாசிக்க
நிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி; சர்வீன் சாவ்லா

நிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி; சர்வீன் சாவ்லா

பிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2 ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

இவர் கடந்த 2015ல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் 2017-ல் தான் அவரது கணவர் பற்றி வெளியில் கூறியுள்ளார். மூன்று வருடங்களாக திருமணம் நடந்ததை அவர் மறைத்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.எந்த மொழி நடிகைகளாக இருந்தாலும் திருமணத்துக்குப் பின்பு பெரும்பாலும் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள். கணவர் வீட்டு குடும்பத்துடன் ஐக்கியமாகிவிடுவார்கள். ஆனால் நடிகை சர்வீன் சாவ்லா மட்டும் கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறி உள்ளார்.

நடிகை சாவ்லா, கேப்டவுனில் தனது கணவர் அக்ஷய்தக்கருடன் தற்போது விடுமுறையை கழித்து வருகிறார். தனது திருமணம் குறித்து பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை அழகாக இருக்கிறது” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது :-

எனது கணவர் தனது தொழில்முறை விருப்பங்களை ஆதரிக்கிறார். நான் என்னுடன் நடிக்கும் சக நடிகரை கிஸ் செய்தாலும். ஏன் நிர்வாணமாக நடித்தாலும்கூட என் கணவர் எதுவும் சொல்லமாட்டார். அந்தளவுக்கு அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அவர் என்னை புரிந்து வைத்து உள்ளார். அதனால் தான் அவரை திருமணம் செய்துகொண்டேன்” என நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க
இலங்கையில் தேசிய சாதனை படைத்துள்ள யாழ். யுவதி

இலங்கையில் தேசிய சாதனை படைத்துள்ள யாழ். யுவதி

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.போட்டிகளின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்து கொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தில் தாண்டி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார்.இதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடித்துள்ளார்.போட்டியின் ஆரம்ப சுற்றில் 3.30 மீற்றர் உயரத்தைப் பாய்ந்த அனித்தா, 2ஆவது சுற்றில் 3.50 மீற்றர் உயரத்தைக் கடந்து, 2017இல் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அவரால் நிலைநாட்டப்பட்ட (3.48 மீற்றர்) தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.இதனையடுத்து 3.55 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த அனித்தா, முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவினார். எனினும், இறுதி முயற்சியில் வெற்றி கொண்ட அவர், 2ஆவது தடவையாகவும் தேசிய சாதனையொன்றை நிகழ்த்தினார்.

எனினும், ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தை மனதில் கொண்டு 3.60 மீற்றர் உயரத்தை அடுத்த இலக்காக அனித்தா தெரிவுசெய்த போதும் அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதன்படி, கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடம் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளில் மற்றுமொரு தேசிய சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.சுபாஸ்கரனின் பயிற்றுவிப்பின் கீழ் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அனித்தா, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தேசிய சாதனை படைத்த பிறகு ஊடகங்களுக்கு அனித்தா வழங்கிய பிரத்தியேக செவ்வியில், தேசிய சாதனையை மீண்டும் புதுப்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்ற எனது பயிற்சியாளர் சுபாஸ்கரன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், 3.60 மீற்றருக்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அனித்தா பதிலளிக்கையில், உண்மையில் 3.55 மீற்றரை உயரத்தை தாவுவதற்கு கிடைத்தமையே மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம்.

ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு கடுமையான முயற்சி செய்து வருகிறேன். எனவே, அதற்கு கிடைத்த வெற்றியாக நான் இதை கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே அனிதா ஜெகதீஸ்வரன்.
மேலும் வாசிக்க
வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு

வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு

வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகபாம்புக்கு பால் ஊற்றி காப்பாற்றப்பட்டுள்ளது.ஆலய வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நாகபாம்பு காயமடைந்துள்ளது.


இதனையடுத்து பாம்புக்கு பால் உற்றி வழிபாடு செய்ததன் மூலம் அதன் மயக்கத்தை அங்கிருந்தவர்கள் போக்கியுள்ளனர்.வீதியை கடக்க முயன்ற நாகபாம்பு மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கி காயமடைந்தது. அதைக் கண்டவர்கள் பாம்மை நாகதம்பிரான் ஆலயத்தில் வைத்து, பாலூற்றி மயக்கத்தைப் போக்கினர். பின்னர் அந்தப் பாம்பை வழிபட்டனர். பாம்பு மயக்கம் நீங்கி அங்கிருந்து அகன்று சென்றுள்ளது.
மேலும் வாசிக்க
ஆபாச படம் பார்த்து விட்டு தாயை கற்பழிக்க முயன்ற மகன் .

ஆபாச படம் பார்த்து விட்டு தாயை கற்பழிக்க முயன்ற மகன் .

குஜாரத்தை சேர்ந்த அயோக்கியன் ஒருவன் ஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய் என்றும் பாராமல் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளான்.நாட்டில் பெண்கள் மீதான் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்டை சேர்ந்த ராகுல் என்பவன் ஆபாச படத்திற்கு அடிமையானவன்.

நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த ராகுல், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளான். இதனையடுத்து தனது தாயின் அறைக்கு சென்று, தனது தாய்க்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்த மனித மிருகம்.

இதனை சற்றும் எதிர்பாராத தாய், அவனிடம் இருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த கயவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க
புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண்ணுக்கு கடும் எதிர்ப்பு!!

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண்ணுக்கு கடும் எதிர்ப்பு!!

தலவாக்கலை – லிந்துலை சமூர்த்தி வலயத்தினால், ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு வைபவத்திற்கு புத்த பகவானின் உருவப்படம் பொறித்த சேலையை அணிந்து வந்திருந்த பெண்ணை வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.அக்கராபத்தனை பொலிஸ் பிரிவின் ஹோல்புறுக் பொல்மோர் தோட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த புத்தாண்டு வைபவம் நேற்று (22) நடைபெற்றது.

புத்தாண்டு வைபவத்தை ஏற்பாடு செய்திருந்த சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியின் மருமகள் இந்த சேலையை அணிந்து வந்திருந்ததாக வைபவத்தில் கலந்து கொண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சிகப்பு நிறமான இந்த சேலையில் மஞ்சள் நிறத்தில் புத்த பகவானின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

புத்தாண்டு வைபவத்தில் கலந்துகொண்டவர்கள், பெண் அணிந்திருந்த சேலை குறித்து அங்கு கடமையில் இருந்து பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டாம் என பொலிஸார் பெண்ணுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்த சேலை தனக்கு இந்தியாவில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்பட்டது என பெண் கூறியதாக அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க
யாழ்.ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து (படங்கள்)

யாழ்.ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து (படங்கள்)

யாழ்.ஆனைப்பந்தி சந்திக்கருகில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆனைபந்தி சந்திக்கருகில் இரவு 9.30 மணியளவில் டிப்பர் வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியதிலையே குறித்த விபத்து இடம்பெற்றது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மிக ஆபத்தான நிலையில் யாழ். போதான வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் யாழ்.பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வாசிக்க
யாழில் கோர விபத்து…! இளைஞன் சம்பவ இடத்தில் பலி (படங்கள்)

யாழில் கோர விபத்து…! இளைஞன் சம்பவ இடத்தில் பலி (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி ஏ 35 வீதியில் நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தானது இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக்க சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் – மன்னார் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் இருவர் பயணித்துள்ளனர். அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்” பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் கட்டப்பிராயைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயரத்தினம் பிரசாத் என்ற இளைஞர் உயிரிழந்தார்.அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குணராசன் திருக்குமரன் என்ற இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


மேலும் வாசிக்க
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்

மேஷம்: மகிழ்ச்சியான நாள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள்.ஆனால், உடல் நலனில் கவனம் தேவை.கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் உண்டாகும்.

கடகம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடிந்துவிடும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். ஆனால், வாழ்க்கைத் துணைவழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக் கூடும்.

கன்னி: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

துலாம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிடவேண்டாம். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் உண்டாகும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். விற்பனையும் சுமாராகத்தான் இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

தனுசு: இன்று மிகவும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் எதிர்பாராத வகையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். பொறுமையுடன் எதிர்கொண்டால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மகரம்: உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன், சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். லாபமும் அதிகம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களால் வீட்டில் சலசலப்பு ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.


மேலும் வாசிக்க

Monday, April 23, 2018

யாழில் விடிய விடிய ரவுடிகள் அட்டகாசம்! பெற்றோல் குண்டு வீச்சு (படங்கள்)

யாழில் விடிய விடிய ரவுடிகள் அட்டகாசம்! பெற்றோல் குண்டு வீச்சு (படங்கள்)

யாழ். தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு 11 மணியளவில் மட்டுவில் வளர்மதி பகுதியில் வசிக்கும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரின் வீட்டுக்குள் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இத் தாக்குதல் தொடர்பாக நேற்று இரவு உடனடியாகவே கிராம சேவகரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இன்று மதியம் 12 மணி வரைக்கும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோருக்கு கிராம சேவகர் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

உடனடியாக கிராம சேவகரின் வீட்டுக்குச் சென்ற மாகாணசபை உறுப்பினர் நிலைமைகளை பார்வையிட்டதுடன் தென்மராட்சி பகுதிக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை நேரடியாக சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடங்களுக்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நேற்று இரவு 11 மணியளவில் கிராம சேவகரின் வீட்டு வளவுக்குள் நுழைந்தவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததோடு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் அதிகாலை 5 மணியளவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக கட்டுக்காணி ஒழுங்கையில் உள்ள வீட்டுக் கதவினையும் கொத்தி வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சிப் பெட்டி உட்பட்ட பெறுமதியான வீட்டுத்தளபாடங்கையும் அடித்து நொறுக்கியதோடு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி விட்டு செல்லும் போது வீட்டின் மீது பெற்றோர் குண்டினையும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் சமையலறையில் தீப்பிடித்துள்ளது. இதன் பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் மட்டுவில் வளர்மதி பகுதிக்குச் சென்ற அக்குழு கிராம சேவகரின் அயல் வீட்டுக்குள்ளும் நுழைந்து அதேபோன்றே சொத்துக்களை அடித்து நொறுக்கி களேபரத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த ரவுடிக்கும்பலின் தாக்குதல்களில் தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இம்மூன்று தாக்குதல் சம்பவங்களையும் ஒரு குழுவே மேற்கொண்டிருக்கின்றது என தெரிவிக்கும் சாவகச்சேரி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை இன்று காலை கைது செய்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க
யாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்!

யாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்!

முல்லைத்தீவில் இருந்து யாழ் சென்ற 15 வயது சிறுமி ஒருவர் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது 15 என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த குறித்த சிறுமி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது என யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் எவ்வவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் முள்ளியவளையில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாயார் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தரும்படி இன்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க
பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு (படங்கள்)

பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு (படங்கள்)

கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது தொடர்ந்துசீமெந்திலான கொங்கிறீட் கட்டிடம் தென்பட்டுள்ளது.

சந்தேகம் கொண்ட காணி உரிமையாளர் அருகில்இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்றஇராணுவத்தினர் குறித்த காணியில் இருப்பது விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழி என்பதனை உறுதி செய்துள்ளனர்.

குறித்த பதுங்கு குழியானது சுமார் 35 அல்லது 45 அடி அழத்துக்கு நிலமட்டத்தில் இருந்துகீழ் செல்வதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.மேலும் வாசிக்க
பிரபல பாடசாலை மாணவனின் மோசமான செயல்

பிரபல பாடசாலை மாணவனின் மோசமான செயல்

ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.பாடசாலை மாணவர்களுக்கு குறித்த மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக அவர் எடுத்துச் சென்ற போதே மாணவன் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

செங்கலடிப் பிரதேசத்தில் வீதி பாதுகாப்புக் கடமையிலிருந்த ஏறாவூர் பொலிஸார், வாழைச்சேனை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோதே நேற்றிரவு இந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவன் க.பொ.த உயர்தர வகுப்பில் கல்வி பயில்வதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வாசிக்க