முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகளின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் முச்சக்கர வண்டி பயணத்தின் முதலாவது கிலாே மீற்றருக்காக 60 ரூபா அறவிடப்பட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கே.டி. அல்விஸ் தெரிவித்தார்.