வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Srilanka

யாழ் இளைஞனைக்கு கிடைத்த அதிஷ்டம்..!!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ் இளைஞனைக்கு கிடைத்த அதிஷ்டம்..!!

ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.

பங்களாதேஷில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரிலேயே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த மதுசன், உடற்றகுதிச் சோதனையில் தோல்வியடைந்தார்.

இதன் காரணமாகவே அப்போது குழாமில் சேர்க்கப்படவில்லை என்றும் பின்னர் உடற்றகுதிச் சோதனையில் வெற்றி கண்டார் என்றும் கூறப்பட்ட நிலையிலேயே தற்போது குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஆசியக் கிண்ணத் தொடருக்கான தயார் நிலை வீரர்களில் காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்