திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Srilanka

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேரூந்தில் நடந்த விபரீதம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
பேருந்தில் பயணியை அவமானப்படுத்திய நடத்துனர்!

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேரூந்தில் நபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த மொனராகலையை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் 2 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்