புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்! ஏற்படவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கை

பகிர: Facebook WhatsApp X Telegram
அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்! ஏற்படவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கை

இலங்கையின் பாரம்பரிய சொத்தான அலரி மாளிகை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரபல கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அலரி மாளிகையில் புராதன பெறுமதியான பொது சொத்துக்கள் ஆபத்தில் உள்ளதாகவும், அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் பாதுகாப்பு பிரதானியினால் பொலிஸ் மா அதிபரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அலரி மாளிகைக்கு பல்வேறு நபர்கள் சென்று வருவதாக பாதுகாப்பு பிரிவு பிரதானி குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக புரதான பொருட்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகைக்குள் பாதுகாவலர்கள் பயன்படுத்தும் ஆயுத களஞ்சிய அறைகள் இரண்டு உள்ளதாகவும், அதன் பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் பொலிஸ்மா அதிபரிடம் அறிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்