அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.32 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.






