துமிந்த திஸாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் இன்றைய தினம் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் அலுவல்கள் அமைச்சாரக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
திறன் அபிவிருந்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக லக்ஷமன் செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதி அமைச்சராகவும், விளையாட்டு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக சிறியானி விஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்ப்புல்லா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கல்வி மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக மோகன் லால் கிரோ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நிஷாந்த முத்துஹெட்டிகே கப்பல் மற்றும் துறைமுக பிரதி அமைச்சராகவும், இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.






