புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

வியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கருணா சொல்லவில்லை! வியாழேந்திரன் மகிந்தவுடன் இணைய யார் காரணம்??

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் 4ட்டமைப்பில் இருந்து விரைவில் விலக்கப்படுவார்.

அவர், இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரமுடியாது. அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கநேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.

விலைபோன வியாழேந்திரனை நீங்கள் கட்சியில் இணைத்துக்கொள்வீர்களா என இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சுமந்திரனிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘விலை போன ஒருவர் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லையென சுமந்திரன் பதிலளித்த நிலையிலேயே, அக்கேள்விக்கு, கட்சியின்; தலைவரான சம்பந்தன், பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்