இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை ரூபாவாக 180 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 179 ரூபா 4 சதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுவே இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அதிக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






