புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

புலிகளின் தலைவர் பிறந்தநாளால் இரண்டான பாராளுமன்றம்….

பகிர: Facebook WhatsApp X Telegram
மஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவை!

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை ஒளிபரப்புச் செய்யாமல் பிரபாகரனின் பிறந்த தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டதை அரச ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன.

இது தவறான விடயம்” என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடிய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “பிரபாகரனின் பிறந்ததினம், புலிகளின் தினமாக யாழில் அனுஸ்டிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. பின்னர் யாழ். பல்கலையில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டது.

இப்போதுகூட, சபை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்புச் செய்யாமல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறும் சட்டவிரோத அரசாங்கத்தினரின் ஊடகவியலாளர் மாநாட்டை அரச ஊடகங்கள் ஒளிபரப்புகிறார்கள். இது தவறான ஒரு முன்னுதாரணமாகும்.

இப்படியான அடக்குமுறையை மேற்கொள்ளும் மஹிந்த தரப்பினரால், நாட்டில் ஒருபோதும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்க முடியாது. அந்தத் தரப்பினர் நாடாளுமன்றை தொடர்ச்சியாக புறக்கணிக்கிறார்கள். சபாநாயகர் மீது குறைகூறி இன்றும் அவர்கள் வரவில்லை.

உண்மையில் இது மகிழ்ச்சியானது. அதேபோல் தொடர்ந்தும் இருந்தால் உண்மையில் சிறப்பாக இருக்கும். இப்போதுதான், நாம் இதுவரை மிருகங்களுடன் இணைந்துதான் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்பது தெரிகின்றது” என கூறினார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்