சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத பாரிய வீழ்ச்சி!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்..!!

அமெரிக்க டொலர், பிரித்தானியா பவுண்ட், யூரோ ஆகிய சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய, அமெரிக்கா டொலருடன் ஒப்பிடும் போது இன்றைய தினமும் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இன்றைய தினம் அமெரிக்கா டொலரின் விற்பனை விலை 183.17 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.20 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, பிரித்தாணிய பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 234.07 ரூபாயாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 226.6411 ரூபாயாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 210.43 ரூபாயாகவும், பதிவாகியுள்ளதுடன் கொள்வனவு விலை 203 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்