சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

கண்டியில் பதற்றம்! 5 மாடி கட்டடத்தில் உயிருக்கு போராடிய மக்கள் – வெளியாகிய அதிர்ச்சி வீடியோ

பகிர: Facebook WhatsApp X Telegram
கண்டியில் பதற்றம்! 5 மாடி கட்டடத்தில் உயிருக்கு போராடிய மக்கள் – வெளியாகிய அதிர்ச்சி வீடியோ

கண்டியில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இன்று காலை 7 மணியளவில் கண்டி , யட்டினுவர வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் தீப்பரவியுள்ளது.

இதன்போது அக்கட்டிதத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் சிக்கியுள்ளது.

இந்த நிலையில் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து உயர் தப்பியுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் பரபரப்பான மயிர்கூச்செறியும் சம்பவமும் பதிவாகி உள்ளது. மேலும் சிலர் அங்கு சிக்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட நால்வர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

களத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்