சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

யாழில் நடந்த கொடூரம்! அண்ணனை அடித்தே கொன்ற தம்பி

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் நடந்த கொடூரம்! அண்ணனை அடித்தே கொன்ற தம்பி

யாழ்ப்பாணத்தில் அண்ணன் உயிரிழந்த நிலையில் , தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காசு பிணக்கு காரணமாக அண்ணன்,தம்பி மோதிக்கொண்டதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிரங்கநாதன் சுதாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

குறித்த சகோதரர்கள் இடையில் காசு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீண்டகாலமாக பிரச்சினை நிலவி வந்துள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் இரவு அண்ணன் தம்பிக்கு இடையில் காசு பிணக்கு வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது.

வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறிய போது தம்பி மீது அண்ணன் கத்தியால் குத்திய நிலையில் , அண்ணன் மீது தம்பி கொட்டனால் தாக்கியுள்ளார். கொட்டன் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான தம்பி மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்