புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

கொழும்பில் அதிகரிக்கும் பாலியல் தொழில்… விற்பனையாகும் பல பெண்கள்! அதிரடி வேட்டையில் பொலிஸார்

பகிர: Facebook WhatsApp X Telegram
கொழும்பில் அதிகரிக்கும் பாலியல் தொழில்… விற்பனையாகும் பல பெண்கள்! அதிரடி வேட்டையில் பொலிஸார்

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் நிலையத்தில் தேடுதல் நடத்திய பொலிஸார் அங்கிருந்த சில பெண்களை கைது செய்துள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவில் கொட்டா வீதி, அத்துல்கோட்டே, ராஜகிரிய என்ற முகவரியில் உள்ள விபச்சார விடுதி ஒன்றே சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு நேற்றிரவு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

பாலியல் தொழில் நிலையத்தின் முகாமையாளர் எனக் கூறப்படும் பெண்ணொருவரையும் மேலும் 6 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்கள் 25, 28, 29, 32 மற்றும் 48 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.அத்துடன் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்