புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

மயங்கி விழுந்த இளைஞன் மரணம்! முல்லைத்தீவில் நடந்த துயர சம்பவம்

பகிர: Facebook WhatsApp X Telegram
மயங்கி விழுந்த இளைஞன் மரணம்! முல்லைத்தீவில் நடந்த துயர சம்பவம்

கரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 4ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் நிதர்சன் என தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்