செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

அச்சுறுத்தலின் போது இராணுவம் மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கை!

பகிர: Facebook WhatsApp X Telegram
அச்சுறுத்தலின் போது இராணுவம் மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கை!

Controlled Explosion அல்லது Controlled Detonation – (கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாப்பாக வெடிக்க வைப்பது அல்லது செயலிழக்க வைப்பது) எனும் சொற்பதங்கள் தொடர்பில் நிலவும் குழப்பத்தை இராணுவ ஊடகப் பிரிவு தெளிவுப்படுத்தியுள்ளது.

சுற்றியுள்ள உயிர்களுக்கும் அதனை சோதனையிட அனுப்பப்படுபவருக்கும் உயிர் அச்சுறுத்தலாய் விளங்கும் சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டால், அதிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற இராணுவ அதிகாரிகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே Controlled Explosion அல்லது Detonation என அழைக்கப்படுவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், Controlled Explosion அல்லது Detonation முன்னெடுக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்களாய் அர்த்தப்படாது.

எளிதாகக் கூறுவதென்றால், அச்சுறுத்தல் விடுக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படும் பட்சத்தில், அதிகாரிகளால் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை தந்திரோபாயமே Controlled Explosion அல்லது Detonation எனப்படும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்