செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

இது முடிவல்ல -மிரட்டுகிறது ஐ.எஸ்.ஐ.எஸ்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கல்முனை தற்கொலை குண்டுத் தாக்குதல் – சர்வதேச பயங்கரவாத அமைப்பான IS பொறுப்பேற்றது

எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹசீம் இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்