புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

பெற்றோலின் விலை அதிகரிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
நள்ளிரவில் அதிகரித்த எரிபொருள் கட்டணங்கள்: புதிய கட்டண விபரம்!

பெற்றோலின் விலை 3 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டவில்லை.

புதிய விலைமாற்றத்தின் அடிப்படையில் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 135 ரூபாவாகவும் 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை 164 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படுகிறது.

டீசலின் விலையில் மாற்றமில்லை. சுப்பர் டீசலின் விலை 136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைவாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

விலைச்சூத்திரம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்