செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

யாழில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசம்! பட்டப்பகலில் ஆசிரியர்க்கு நேர்ந்தகதி..

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசம்! பட்டப்பகலில் ஆசிரியர்க்கு நேர்ந்தகதி..

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

இந்த துணிகர சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது

பருத்தித்துறை வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதோடு, ஆசிரியரையும் தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியை பாடசாலை முடிவடைந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவர் ஆசிரியையின் தங்கச் சங்கிலியை அறுத்ததுடன் காலால் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை உதைத்து தள்ளியுல்ளனர்.

இதனால் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சரிந்து வீழ்ந்ததில் ஆசிரியர் காயத்துக்குள்ளாகியுள்ளார்.

அச்சமயம் வீதியிலுள்ளவர்கள் ஓடிச் சென்று ஆசிரியை தூக்கி விட்டுள்ளனர்.

இதேவேளை முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துடன் திருடர்க வந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லையென அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்