புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

பலாலி விமான நிலையத்திற்கு கிடைத்தது அனுமதி; அடுத்த வாரம் நிகழ்வுள்ள மாற்றம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
நிவாரண விலையில் பொதுமக்களுக்காக உள்ளுர் விமான சேவைகள்?

பலாலி விமான நிலையத்திலிருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கு அனைத்துலக வான் போக்குவரத்துச் சங்கம் (IATA) அனுமதியளித்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்தமாதம் பலாலியிலிருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

பலாலி விமான நிலையத்திலிருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கு அனுமதியளித்துள்ள அனைத்துலக வான் போக்குவரத்துச் சங்கம் பலாலி விமான நிலையத்துக்கான தனித்துவமான குறியீடான JAF என்பதையும் (IATA code JAF) வழங்கியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்