முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவான வியத்மக அமைப்பின் கலந்துரையாடல் எதிர்வரும் 08ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பே இதுவாகும்.
வரும் 08ம் திகதி கொழும்பு ஷங்கிரிலா விடுதியில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.






