புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

கிளிநொச்சி பாடசாலை மாணவன் தேனுஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! குவியும் பாராட்டு மழை

பகிர: Facebook WhatsApp X Telegram
கிளிநொச்சி பாடசாலை மாணவன் தேனுஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! குவியும் பாராட்டு மழை

தெற்காசிய உதைபந்தாட்ட‌ கூட்டமைப்பின் 19 வயதிற்குட்பட்ட தொடருக்காண இலங்கை அணியில் உருத்திரபுரம் மகா வித்தியாலய அணி வீரர் தேனுஜன் இடம் பெற்றுள்ளார்.

19 வயதிற்குட்பட்ட “SAFF” கிண்ண தொடருக்காக இலங்கை ஜூனியர் உதைபந்தாட்ட‌ அணி நேபாளம் செல்லவுள்ள நிலையில் இவ் அணியில் இவ் வீரர் இடம் பிடித்துள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் அணிக்காக தேனுஜன ஆடி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் கழக ரீதியாக மற்றும் பாடசாலை ரீதியாக தான் பங்கு பற்றிய அணிகளின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வீரராக திகழ்வதுடன் கடந்த வருடம் வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் பங்குபற்றிய வயது குறைந்த வீரர் என்பது மேலும் குறிப்பிட்டு சொல்ல கூடிய அம்சமாகும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்