மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஐக்கிய தேசிய கட்சிதானே? என பலரும் ஐயம் எழுப்பியுள்ளனர்.
பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உறுப்பினர் விபரத்திரட்டிலே அவர் அங்கம் வகிக்கும் கட்சி , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குழப்பத்தினால் அமைச்சர் ராதாகிருஸ்ணன் ரணில் கட்சியா? அல்லது மைத்திரி கட்சியா ? எனப் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.






