புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

வரலாற்றில் இல்லாதளவு பெரிய வெங்காய விலையில் மாற்றம்

பகிர: Facebook WhatsApp X Telegram
வரலாற்றில் இல்லாதளவு பெரிய வெங்காய விலையில் மாற்றம்

நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு வரலாற்றிலேயே கிடைக்காதளவு ஆகக்கூடிய விலை கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பெரிய வெங்காயம் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாக மாத்தளை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.பி.கே. தொடன்வல தெரிவித்துள்ளார்.

இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணம் இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டமையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருகிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான உற்பத்திச்செலவு 50 ரூபாவுக்கும் 52 ரூபாவுக்கும் இடைப்பட்டதாக அமைந்திருந்த நிலையில், அதிகரித்த விலையில் இடம்பெற்ற கொள்வனவினால் உற்பத்தியாளர்கள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அடுத்த ஆண்டில் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் செய்கையிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்