புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

கோத்தபாய தொடர்பாக பல சர்ச்சைக்குரிய இரகசியங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
கோத்தபாய தொடர்பாக பல சர்ச்சைக்குரிய இரகசியங்கள்

முன்னாள் இராணுவ லெப்டினன் கேர்ணல் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் கடமையாற்றிய போது, படையினரை மிகவும் மோசமாக நடத்தியதாகவும் இராணுவத்தில் இருந்து அவர் விலகியமை தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மிகவும் சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை கொழும்பில் நேற்று வெளியிட்டுள்ளார்.

“ கோத்தபாய ராஜபக்ச தற்போது உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். நான்கு இராணுவப் படைப் பிரிவுகளில் கடமையாற்றி ஒரு இராணுவ அதிகாரி.

சிங்க படைப் பிரிவில் அவருக்கு மிக மோசமான அனுபவம் கிடைத்துள்ளது. கோத்தபாய ராஜபக்ச மனித உரிமைகள், படையினரின் நலன்புரி விடயங்கள் குறித்து பேசுவதால் நான் இதனை கூறுகிறேன்.

பொலநறுவை சுதுகந்த என்ற கஷ்டமான காட்டுப் பகுதியில் படை வீரர் ஒருவர் தனது நெஞ்சு வலிக்கின்றது எனக் கூறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த படை வீரரை இழுத்துச் செல்லுமாறு ஏனைய வீரர்களிடம் கூறியுள்ளார். இழுத்துச் செல்லும் போது கோத்தபாய அந்த இராணுவ வீரரை காலால் உதைத்துக் கொண்டு பின்னே சென்றுள்ளார். சிறிது தூரம் செல்லும் போது அந்த இராணுவ வீரர் மரணமடைந்து விட்டார்.

இதன் பின்னர் ஏனைய படையினர் கோத்தபாயவை சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பிச் சென்ற அவர் ஒரு மாதம் கடமைக்கு திரும்பவில்லை. நுகேகொடையில் உள்ள வீட்டில் இருந்துள்ளார். இராணுவத்தினர் வீட்டுக்கே சென்று தாக்கியுள்ளனர். இதன் பின்னர் அவர் சிங்க படைப்பிரிவுக்கு வரவில்லை.

எமக்கு எதிராக வாக்கு கேட்கும் லெப்டினன் கேர்ணல் கோத்தபாய ராஜபக்சவுக்கு லெப்டினன் கேர்ணலுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் கிடைக்கின்றது. 20 ஆண்டுகள் இராணுவத்தில் கடமையாற்றினால் ஓய்வூதியம் கிடைக்கும்.

20 ஆண்டுகள் பூர்த்தியான பின்னர் அவர் ஒரு நாளும் கடமைக்கு வரவில்லை. தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறி அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.

போரில் நடந்த சம்பவங்களுக்கு அமைய அன்றைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரதன், கோத்தபாய ராஜபக்சவை இராணுவ நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்திருந்தார்.

அப்போது கோத்தபாய ராஜபக்சவும் அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்சவும் ரஞ்சன் விஜேரத்னவை சந்தித்து பேசியுள்ளனர்.

கிடைத்திருக்கும் தகவலுக்கு அமைய, தன்னை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டாம், இராணுவத்தில் இருந்து விலகி செல்ல அனுமதியுங்கள் என்று ரஞ்சன் விஜேரத்னவை கும்பிட்டு கேட்டுள்ளார். இந்த கோரிக்கைக்கு ரஞ்சன் விஜேரத்ன இடமளித்துள்ளார்.

இந்த காரணத்தை கூற வெட்கம் என்பதால், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி சென்றதாக கூறியுள்ளார்” என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள சிலர் கூறுவது போல் கோத்தபாய ராஜபக்ச எனக்கு கட்டளைகளை பிறப்பிக்கவில்லை.

போர் திட்டங்களை வகுத்து நானே செயற்படுத்தினேன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அவற்றை செய்ய முடியாது எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்