புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

இலங்கை விமானப்படை தளபதியால்.. யாழ் விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகளிற்கு காத்திருந்த சோகம்??

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை விமானப்படை தளபதியால்.. யாழ் விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகளிற்கு காத்திருந்த சோகம்??

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தரம் உயா்த்தி மக்களுக்கான விமான சேவையினை தொடங்குவதை விமாப்படை தளபதி விரும்பாத நிலையில், இந்திய தொழிநுட்ப குழுவினர் அநாகாிகமாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், கொழும்பு ரெலிகிராப் இணையத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

குறித்த கட்டுரையிலேயே அவர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதற்குப் பதிலாக, அந்த திட்டம் இனவாத பொறாமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமானப்படைத் தளபதி அதற்கு ஒத்துழைக்க தவறிவிட்டதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

2019 செப்ரெம்பர் 16ஆம் திகதி, யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த இந்திய தொழில்நுட்ப குழுவினர் கடுமையான வேலைகளின் பின்னர், தேநீர் கேட்டபோது, இந்தியர்கள் தமிழர்களுக்காக இதனை செய்கிறார்கள்.

நீங்கள் என்னிடம் தேநீர் பரிமாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சோர்ந்து போன இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பியதாகவும் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இத அவர்களிற்கு நேர்ந்த பாரதுாரமான விடயம் எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது அவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்