இவரை உங்களிற்கு தெரியுமா..? உதவி கோரியுள்ள பொலிஸார்

படத்திலுள்ள ஆஷென் மலித் என்ற இந்த இளைஞர் தொடர்பான தகவல்களை பெற பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஆஷென் மலித் என்ற இந்த இளைஞன் தொடர்பாக பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

திருட்டு, கடத்தல் தொடர்பான விவகாரங்கள் உட்பட யுவதியொருவர் காணாமல் போன விவகாரத்தில் இவர் மீது, யுவதியின் பெற்றோர் புலஸ்திரிபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

நாட்டிலுள்ள பல ஹோட்டல்களில் பணிபுரிந்துள்ள இவர் உல்லாச பயணிகள், செல்வந்தர்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

அதோடு ஹிக்கடுவ, கண்டி, கஹவத்த பகுதிகளில் உல்லாச பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த தகவல் பற்றி ஏதேனும் தெரிந்தால், குறித்த இலக்கங்களிற்கு தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0272242470

0769223030

0774935923