இன்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று (நவ.1) வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை
பவுணுக்கு 300 ரூபா அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது.

இதன் எதிரொலியாக இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.

யாழ்ப்பாணத்தில் நேற்று 22 கரட் தங்கம் பவுணுக்கு 67 ஆயிரத்து 550 ரூபாவுக்கு விற்கப்பட்டது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுணுக்கு 300 ரூபா அதிகரித்து பவுண் ஒன்று 67 ஆயிரத்து 850 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

24 கரட் தூய தங்கத்தின் விலை

இன்றைய காலை நிலவரப்படி, யாழ்ப்பாணத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 300 ரூபா உயர்ந்துள்ளது. அதன்படி தூய தங்கம் 74 ஆயிரம் ரூபாவாகக் காணப்படுகிறது.