கோத்தபாய 574மில்லியன் ரூபா! சஜித் 372 மில்லியன் ரூபா! வெளியானது விபரம்

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று பிரதான வேட்பாளர்களும் செலவிட்டுள்ள நிதி விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 574 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.

அச்சு ஊடக விளம்பரங்களிற்காக 68 மில்லியன் ரூபாவும், இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரத்திற்காக 219 மில்லியன் ரூபாவும், சுவரொட்டி மற்றும் தேர்தல் பிரச்சாரங்களிற்காக 85 மில்லியன் ரூபாவும் செலவிட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 372 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.

அச்சு ஊடக விளம்பரங்களிற்காக 42 மில்லியன் ரூபாவும், இலத்திரனியல் ஊடக விளம்பரங்களிற்காக 254 மில்லியன் ரூபாவும், சுவரொட்டி மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்காக 76 மில்லியனும் செலவிட்டுள்ளார்.