செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
India

மாடியில் இருந்து தவறி விழப்போன குழந்தை.. ஹீரோவாக சென்று காப்பாற்றிய பூனை.. வைரல் காட்சி..!

பகிர: Facebook WhatsApp X Telegram
மாடியில் இருந்து தவறி விழப்போன குழந்தை.. ஹீரோவாக சென்று காப்பாற்றிய பூனை.. வைரல் காட்சி..!

மாடியிலிருந்து தவறி விழப்போன ஒரு வயதுடைய குழந்தையை தாவி சென்று பூனை தடுத்து நிறுத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

கொலம்பியாவில் ஒரு வீட்டில் சாமுவேல் என்ற குழந்தை அங்கேயும், இங்கேயும் தவழ்ந்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை விளையாடிக்கொண்டே மாடியின் படிக்கட்டிற்கு சென்று விழப்பார்த்துள்ளது.

இதனை அறிந்த வீட்டின் பூனை உடனே பாய்ந்து ஓடிவந்து குழந்தையை தடுத்து நிறுத்தியுள்ளது. ஹீரோவாக செயல்பட்டு அந்த பூனையின் பெயர் கட்டுபெலா என கூறப்படுகிறது. மேலும் அந்த குழந்தையை காப்பாற்றியது மட்டுமல்லாமல், மீண்டும் குழந்தை தவறி விழாமல் தடுப்பதற்காக மாடிபடிகட்டுகளின் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தது.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்