வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Srilanka

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் பலி என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவம் இன்று (05.03.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியில் பாதுகாப்பற்ற கடவையை மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

36 வயதான 3 பிள்ளையின் தகப்பனான கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மளையாலபுரம் சேர்ந்த மாரிமுத்து நாகராசா என்ற நபரே பலியானார்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயனித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் விபத்துக்கு உள்ளாகி பலியானர் என்பது குறிப்பிடத்தக்க விடைமாகும்.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்