செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

சோகத்தில் மூழ்கிய மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி

பகிர: Facebook WhatsApp X Telegram
சோகத்தில் மூழ்கிய மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் உடற்கல்வி பாடநெறியைச் சேர்ந்த இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர் Mohamed_Fazaal வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

மிகவும் துடிப்பான பயிலுனரான அம்பாந்தோட்டையைச் சேர்ந்த Mohamed_Fazaal அனைவராலும் விரும்பப்படும் ஓர் மாணவ ஆசிரியராவார்.

கராத்தே தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற இவர் திடமான உடற்கட்டைக் கொண்டவர். நகைச்சுவை ததும்ப பேசும் இவரது தமிழே தனி அழகுதான்.

இவரது மரணச் செய்தி கேட்டு மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இவரது ஆன்மா பரகதியில் இறைவன்தாள் அமைதிகொள்ள இறைஞ்சுவதோடு அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்