புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

சிங்கப்பூர் விமானத்தில் தமிழுக்கு கிடைத்த அங்கிகாரம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
சிங்கப்பூர் விமானத்தில் தமிழுக்கு கிடைத்த அங்கிகாரம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்

விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரியும் சரவணன் அய்யாவு அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்த ஓடியோ பதிவை முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்வது தன்னுடைய நீண்டகால எண்ணம் என்றும் அதற்கு அனுமதி கொடுத்த விமானத்தின் கப்டனுக்கு நன்றி தெரிவித்தும் அந்த பதிவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

விமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை குறித்து பயணிகளுக்கு விமானிகள் அறிவிப்பர். இந்த அறிவிப்பை அவ்வப்போது நான்கு மொழிகளிலும் முன்பதிவு செய்வது சிரமம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் செய்தி நிறுவனமான மீடியாகார்ப்பின் தமிழ்ச் செய்தி பிரிவுக்கு அந்த நிறுவனம் அளித்த விளக்கத்தில் விமானி சரவணன் தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிக்கும் அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்