ரஞ்சன் ராமநாயக்க ஒரு பாடத்தில் சித்தியடையவில்லை

வெளியாகியுள்ள 2019ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2 பாடங்களில் சாதாரண சித்தியைப் பெற்றதுடன் ஒரு பாடத்தில் சித்தியடையவில்லை.

இந்தத் தகவலை அவரே தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவர் அரசியல் விஞ்ஞானம், தொடர்பாடல் மற்றும் தொடர்பாடல் கல்வியில் எஸ் சாதாரண தரச் சித்தியடைந்ததுடன் கிருஸ்தவத்தில் சித்தியடையவில்லை. ஆங்கிலத்தில் ஏ சித்தியைப் பெற்றுள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க தோற்றினார். அவர் சட்டத்தரணியாகும் கனவை நனவாக்கிக் கொள்ளும் நோக்கில் பரீட்சை எழுதினார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, தனது 57ஆவது வயதில் உயர்தரத்தில் கல்வி கற்று 38 ஆண்டுகளின் பின் தனது எதிர்காலத்திற்காக பரீட்சை எழுதியிருந்தார்.