யாரையும் நம்பாதீங்க… ஏழாம் வீட்டில் சனி! குரு பார்வை உங்கள் மீது விழுவதால் அடுத்தடுத்து காத்திருக்கும் விபரீத ராஜயோகம்

2020 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வெற்றிகரமாக மகிழ்ச்சிகரமான வாரமாக அனைவருக்கும் தொடங்கியுள்ளது.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்த வார ராசி பலன்களை சொல்கிறோம். (04-01-2020 முதல் 09-01-2020 வரை)

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை நிலை எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்
ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சூரியன், குரு, சனி கேது, புதன், பத்தாம் வீட்டில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. சந்திரன் சஞ்சாரத்தினாலும் இந்த வாரம் சிறப்பான வாரமாக உள்ளது.

மேஷம் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் இணைந்துள்ளது அற்புதமான அமைப்பு. சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் உங்க எதிர்காலத்திற்கு நல்ல அஸ்திவாரம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு யோகம் கை கூடி வரப்போகிறது. வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாடு வணிகத்தில் லாபம் அதிகரிக்கும்.

எட்டாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்க. இரண்டாம் மற்றும் மூன்றாம் வீட்டில் செவ்வாய் பார்வை படுகிறது. காரசாரமான பேச்சுக்கள் வேண்டாம். விட்டுக்கொடுத்து போங்க நல்லதே நடக்கும்.

சுக்கிரன் ஜனவரி 9 ஆம் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தொழிலில் லாபம் பண வரவு அதிகமாகும். மனைவியின் மூலம் வருமானம் வரும். ஒன்பதில் குரு இருக்க அதிர்ஷ்டம் ஏற்படும் திருமண யோகம் வரும். குரு உங்க ராசியை பார்க்கிறார் பண வரவும் தொழில் லாபமும் ஏற்படும் அற்புதமான வாரமாக இந்த வாரம் உள்ளது.

ரிஷபம்
ரிராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு ஏழாம் வீட்டில் செவ்வாய் எட்டாம் வீட்டில் சூரியன், குரு, சனி,கேது, புதன் ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் என இந்த வாரம் தொடங்குகிறது. அஷ்டம ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் கூட்டணி வாரம் முழுவதும் நீடிக்கிறது. அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் இருப்பது உடல் நலத்தை பாதிக்கும்.

எச்சரிக்கையாக இருங்க. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் எட்டிப்பார்க்கும். கண்கள் தொடர்பான பிரச்சினை, வாய் பற்கள் பிரச்சினை வரும்.

வண்டி வாகனத்தில் போகும் போது கவனம் தேவை. உங்க ராசிநாதன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பாதிப்புகளில் இருந்து உங்களை காப்பாற்றுவார். செவ்வாய் களத்திர ஸ்தானத்திற்கு வந்திருப்பதால் திருமண யோகம் கை கூடி வரும்.

குரு பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் நல்ல பணவரவு இருக்கும். காதல் விவகாரங்களில் கவனம் தேவை. பயணங்களில் கவனமாக இருங்க.

தேவையில்லாத விமர்சனங்கள் வேண்டாம். இரண்டாம் வீட்டில் உள்ள ராகுவை எட்டில் உள்ள குரு பார்க்கிறார். கேது எட்டாம் வீட்டில் உள்ள குரு உடன் இணைந்து கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார். சொத்து சேர்க்கை ஏற்படும்.

காதல் உங்களுக்கு கை கூடும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். எட்டில் உள்ள கிரகங்களால் பணம் விசயத்தில் கவனமாக இருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போட வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கல்வியில் தடைகள் ஏற்பட்டாலும் கவலை வேண்டாம் விரைவில் தீரும்.

பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். இந்த வாரம் உங்களுக்கு வரும் பயணம் வெற்றிகரமாக ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சுக்கிரன் பத்தாம் வீட்டிற்கு ஜனவரி 9ஆம் தேதி இடம் மாறுகிறார். மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அற்புதங்கள் நிறைந்த வாரமாக அமைந்துள்ளது.

மிதுனம்
ராசிக்குள் ராகு ஆறாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் சூரியன்,குரு, சனி, கேது, புதன், எட்டாம் வீட்டில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. களத்திர ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. உங்க ராசியின் மீது குரு பார்வை இருப்பதால் நல்லதே நடக்கும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். உங்க உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். போக்குவரத்தில் அக்கறை காட்டுங்கள்.

மனைவி உடல் நலத்தில் கவனம் தேவை, மனைவி உடன் கருத்து மோதல் வேண்டாம். திருமண விசயங்களில் அவசரம் வேண்டாம். வார இறுதியில் உங்க ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி ஐந்துக்கு அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு வருகிறார்.

கல்வி வாய்ப்பு அற்புதமாக இருக்கும். அரசியல்வாதிகள் நிதானமாக இருங்க. உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. தொழில் கூட்டாளிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்க ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி ஐந்துக்கு அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு வருகிறார்.

கல்வி வாய்ப்பு அற்புதமாக இருக்கும். வெளிநாடு போகும் யோகம் வரும் வெளியூர் போகவும் வாய்ப்பு கிடைக்கும். பிசினஸ் செய்பவர்கள் கவனமாக இருங்க முதலீடுகளை அதிகம் பண்ணாதீங்க.

கடகம்
ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சூரியன், குரு,சனி கேது, புதன் ஏழாம் வீட்டில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க பொருளாதார நிலைமை இந்த வாரம் அற்புதமாக இருக்கும்.

சுப விரைய செலவுகள் ஏற்படும் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில் இடமாற்றம் வேலை மாற்றம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மிகச்சிறந்த மாற்றங்களைத் தரக்கூடிய வாரம், வெளிநாடு யோகத்தை தரும்.

ஆறாம் வீட்டிற்கு அதிபதி குரு ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது விபரீத ராஜயோக காலமாகும். உங்க பலம் அதிகரிக்கும் , வருமானம் அதிகரிக்கும், ரியல் எஸ்டேட் தொழில் வருமானத்தை கொடுக்கும். கணவன் மனைவி உறவு அற்புதமாக இருக்கும். புகழும் கவுரமும் கூடும். பிசினஸ் வியாபாரம் அற்புதமாக இருக்கும் நல்ல லாபம் கிடைக்கும். அரசு அதிகாரிகள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பெண்கள், இளைஞர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். எதையும் மென்மையாக பேசினால் பிரச்சினைகள் இல்லை. வார இறுதியில் லாப ஸ்தான அதிபதி சுக்கிரன் எட்டில் அமர்வதால் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, நான்காம் வீட்டில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சூரியன், குரு, சனி கேது, புதன் ஆறாம் வீட்டில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் இருப்பது சாதகம். உங்க ராசிநாதன் சூரியன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்துள்ளது. மிகச்சிறந்த வெற்றி கிடைக்கும். முந்தைய கால கட்டத்தில் இருந்த புண்ணியங்கள் உங்களுக்கு வழிகாட்டும். உங்க உடல் நலத்திலும் உங்க வாழ்க்கை துணையின் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவி பேச்சில் கவனம் செலுத்துங்கள்.

கோபமாக பேச வேண்டாம். சொத்துக்கள் வாங்கலாம். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் மனதிற்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களை எதிரியாக நினைத்தவர்கள் சமாதானம் பேச வருவார்கள்.

அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு இது அற்புதமான வாரம். அரசியல்வாதிகளுக்கு வெற்றிகரமான வாரம் கவுரவப்பதவிகள் தேடி வரும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் வெற்றிச் செய்தியை ருசித்திருப்பார்கள்.

ஆறில் இருந்து சுக்கிரன் 7 ஆம் வீட்டிற்கு மாறுவது சிறப்பு. சுக்கிரன் உங்க தொழில் ஸ்தான அதிபதி, அவரது பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. குரு சுக்கிரன் பார்வை ஒரே நேரத்தில் கிடைப்பது சிறப்பு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெண்களுக்கு நல்லதே நடக்கும். நன்மைகள் நடைபெற தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க நல்லதே நடக்கும். சிம்மம் ராசிக்கு ஜனவரி 4ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானமாக செல்லவும்.

கன்னி
புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய் நான்காம் வீட்டில் சூரியன், குரு, சனி, கேது, புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் ராகு என இந்த வாரம் தொடங்குகிறது.

உங்க சுக ஸ்தானம் வலுத்துள்ளது. பத்தில் ஒரு பாவி இருப்பது நல்லது பத்தாம் வீட்டில் ராகு இருக்கிறார் நல்ல வேலை கிடைக்கும். தகவல் தொடர்பில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் புதிய வேலை கிடைக்கும். செவ்வாய் பகவானால் உங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

காதல் திருமண முயற்சிகள் கை கொடுக்கும். சுக்கிரன் 9ஆம் தேதி முதல் ஐந்தாம் வீட்டில் இருந்து ஆறாம் வீட்டிற்கு செல்வதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை வாங்கலாம். குரு கேது உடன் இணைந்து பண வரவை தருவார். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகம். தொழில் ரீதியான பயணம் செய்வீர்கள். வெளிநாட்டிற்கு படிக்கவோ, வேலை செய்யவோ போகலாம். பெண்களுக்கு ரொம்ப நல்ல வாரம்.

எந்த வம்புச்சண்டைக்கும் போகாதீங்க. பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபம் வரும். கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு ஜனவரி 4, 2020 காலை 10.05 மணி முதல் ஜனவரி 6,2020 இரவு 8.36 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சூரியன், குரு, சனி கேது,புதன், நான்காம் வீட்டில் உங்க ராசிநாதன் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் ராகு என இந்த வாரம் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானம் வலுத்துள்ளது. முன்னேற்றகரமான வாரம். செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் கவனமாக இருங்க. வீட்டில் கோபப்படாதீங்க காரமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

பாப கிரகங்களின் சஞ்சாரம் மூன்றாம் வீட்டில் உள்ளதால் உங்களிடம் உள்ள பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளுங்கள் திருடு போக வாய்ப்பு இருக்கிறது. நிறைய பொருட்கள் வாங்க நினைப்பீங்க தரமானதாக பார்த்து வாங்குங்க.

இடம் வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை பார்த்து வாங்குங்க. புது வீடு கட்ட முயற்சி செய்யலாம். லோன் வாங்க முயற்சி பண்ணுங்க கிடைக்கும். உங்க மனைவியால் உங்களுக்கு பெருமை சேரும். உங்க அப்பாவினால் உங்களுக்கு வருமானம் வரும்.

வெளிநாடு தொடர்பான வேலைகளுக்கு முயற்சி பண்ணுங்க கிடைக்கும். விரைய செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்க சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் கவனமாக இருங்க. பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். விலை உயர்ந்த நகைகளை போட்டுக்கொண்டு வெளியே போக வேண்டாம்.

பணத்தை அதிகமாக பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்ட சுற்ற வேண்டாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. இந்த வாரம் ஏற்றங்கள் நிறைந்த வாரம். பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.

மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி 6,2020 இரவு 8.36 மணி முதல் ஜனவரி 9, 2020 காலை 3.49 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

விருச்சிகம்
ராசிக்குள் உங்க ராசி நாதன் செவ்வாய் சஞ்சரிக்கிறார் சிறப்பு. இரண்டாம் வீட்டில் சூரியன், குரு,சனி, கேது, புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மூன்றாம் வீட்டில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் ராகு, என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. விருச்சிக ராசிக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் சிறப்பான வாரம். காரணம் உங்க குடும்ப ஸ்தானம் வலுத்துள்ளது. உங்களின் மன வலிமை அதிகரிக்கும். குருவினால் பண வருமானம் உங்களைத் தேடி வரும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ வேண்டாம், உங்க பயணங்களில் கவனமாக இருங்க. இரண்டாம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனமாக இருங்க. அஷ்டம ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் முதுகு பிரச்சினைகள் வரலாம் கவனம் வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணம் விசயம் மட்டுமல்ல எந்த தொழில் முதலீடுகளையும் கொஞ்சம் யோசித்து பண்ணுங்க.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் வரும். உடலில் சின்ன அயற்சி எற்படும் ஓய்வெடுங்க. உங்க திறமைக்கு மதிப்பு கிடைக்கும். ஆதரவு அதிகரிக்கும். சுபமான பேச்சுக்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

முருகப்பெருமானை சஷ்டி நாளில் வணங்குங்கள். செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு விளக்கேற்றி வழிபடுங்க நல்லது நடக்கும். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி 9, 2020 காலை 3.49 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

மாணவர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரம் அரையாண்டு தேர்வு முடிவுகள் அற்புதங்களை தரும். வியாபாரிகளுக்கு லாபம் தரும் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் வாருங்கள் தானம் செய்யுங்கள்.

தனுசு
குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. உங்க ராசிக்குள் சூரியன், சனி, கேது, குரு, புதன் இரண்டாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. ஐந்து கிரகங்கள் உங்க ராசியில் அமர்ந்து சரியாக உங்க களத்திர ஸ்தானத்தை பார்க்கின்றன. மகிழ்ச்சிகரமான கால கட்டம். பணவரவு அற்புதமாக இருக்கும்,கூடவே செலவும் வரும்.

ஜென்ம சனி காலமாக இருப்பதால் மனைவியோடு எந்த கருத்து வேறுபாடும் வேண்டாம். கடன் அதிகம் வாங்காதீங்க. ஆசை வார்த்தைக்கு அடிமையாகாதீர்கள்.

கிரக சூழ்நிலை சரியில்லாமல் இருப்பதால் கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். யாரையும் நம்பாதீங்க எதிர்பாலினரிடத்தில் பெண்கள் கவனமாக இருங்க. இரவு நேர பயணத்தை தவிர்த்து விடுங்கள். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு விடுமுறை காலம் சொந்த ஊருக்கு வருவீர்கள்.

பேச்சில் கவனமாக இருங்க அமைதியே மிகச்சிறந்த மருந்து. இந்த வாரம் உங்களுக்கு இரண்டாம் வீட்டில் இருந்து சுக்கிரன் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்திற்கு செல்வதால் பணம் விசயத்தில் சிக்கனத்தை கடைபிடியுங்கள். ஆலய தரிசனம் செய்வீர்கள். பெருமாள் கோவிலுக்கு போய் தரிசனம் செய்யலாம். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள் அது திருப்புமுனையை ஏற்படுத்தும்.

நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துங்கள். உங்கள் செயல்கள் எல்லாம் இந்தவாரம் பெண்களுக்கு வேகம் அதிகமாகும். தம்பதிகளிடையே அன்பு அதிகமாகும். வியாபாரத்தில் செழிப்பு ஏற்படும் வருமானம் அதிகரிக்கும் கவலை வேண்டாம். பிரதோஷ நாளில் சிவ பெருமானை வணங்குங்கள். வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாளை வணங்குங்கள்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால், ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் சூரியன், குரு, சனி, கேது,புதன், ராசிக்குள் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் என இந்த வாரம் தொடங்குகிறது. அதிர்ஷ்டகரமான வாரம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.

நண்பர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகமாகும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல நீங்க பார்க்க நினைத்தவர்கள் உங்க தேடி வருவார்கள். வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். லாப வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சொந்த வீடு யோகம், வீட்டு உபயோகப்பொருட்களை வாங்குவீர்கள். பொழுதுபோக்குகள் நிறைந்த வாரம். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் நிறைந்த வாரம். சிலருக்கு வேலையிலும், இருக்கக்கூடிய வீடுகளிலும் ஏற்படும் இடமாற்றம் நன்மையை தரும்.

பெண்கள் உடல் நலத்தில அக்கறை செலுத்துங்க. காதல் மலரும் காலம் பெண்கள் தனியாக எங்கேயும் நேரங்கெட்ட நேரத்தில வெளியே போகாதீங்க. பாதுகாப்பாக இருங்க. விழிப்புணர்வோட இருங்க வண்டி வாகனத்தில் போகும் போது நிதானமும் கவனமும் தேவை. பிசினஸ் செய்பவர்களுக்கு முதலீடுகளில் லாபம் கிடைக்கும். பணம் சிக்கல்கள் தீரும் காரணம் சுக்கிரன் இரண்டாம் வீடான தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். அஷ்டமி திதியில் பைரவருக்கு செவ்வரளி மாலை போட்டு வழிபாடு செய்யவும்.

கும்பம்
உங்களுக்கு வெற்றிகரமான வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது. ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் சூரியன், குரு, சனி, கேது, புதன், விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் தொடங்குகிறது. உங்க பிசினஸ்ல லாபம் கொட்டப்போகிறது.

காரணம் லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூட்டணி அமைந்துள்ளது அற்புதமாக இருக்கிறது. தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும் நன்மையை செய்வார். செவ்வாய் பகவான் உங்க தொழிலில் லாபத்தை தருவார். விரைய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் வார இறுதியில் உங்க ராசிக்கு வருவது சிறப்பு. உங்க முகம் பொலிவடையும் நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவருமானமும் அதிகமாகும்.

பெண்களுக்கு அற்புதமான கால கட்டம். சொத்துக்கள் வாங்கலாம். மாணவர்களுக்கு அற்புதமான வாரம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள். பெண்களுக்கு அதிர்ஷ்டமான வாரம். குடும்பத்திலும் குதூகலமாக இருக்கும். நல்ல ஆதாயம் கொடுக்கக்கூடிய செயல்கள் நடைபெறும். எதையும் தள்ளி வைக்காதீங்க முடிக்க வேண்டிய நல்ல காரியங்களை முடிச்சிருங்க. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

கணவன் மனைவி உறவு பலப்படும். நீங்க ஆசைப்பட்ட காரியங்கள் நடைபெறும். விருந்துகளினால் வீடு களைகட்டும். சிறு பயணங்கள் சந்தோஷத்தை தரும். சொந்த பந்தங்களுடன் ஆன்மீக பயணம் செல்வீர்கள். பணம் பல வகைகளில் வரும் அதை செலவு பண்ணுங்க. அப்பத்தான் ஜாக்பாட் அடிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளால் பாராட்டுக்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய வெற்றிகள் தேடி வரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகமாகும்.

மீனம்
உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு, தொழில் ஸ்தானத்தில் குரு, சனி, கேது, சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. பத்தாம் வீடாத தொழில் ஸ்தானத்தில் கிரகங்கள் கூட்டணி இருப்பதால் முன்னேற்றகரமான வாரம். நீங்க தொட்டது துலங்கும், பதவி உயர்வு ஏற்படும். நீங்க நினைத்தது நிறைவேறும். இது யோகமான காலகட்டம், வீடு, நிலம் வாங்கலாம்.

பெண்கள் புதிய வேலை மாறலாம். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். இந்த வாரம் பணவரவு நன்றாகவே இருக்கும். செய்யும் தொழில் லாபத்தை கொடுக்கும். செவ்வாய் பகவானால் சகோதரர் ஒத்துழைப்பு கிடைக்கும். புதன் சஞ்சாரத்தினால் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு படிப்பு, உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. தேர்வு பயம் நீங்கிவிடும். காதல் மலர்ந்து கல்யாணம் கூடும். அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

கண்கள் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு மாறுவதால் ஜாக்கிரதையாக இருங்க. நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வையுங்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். நண்பர்களிடம் கூட கவனமாக இருங்க. பண விசயத்தில் பத்திரமாக இருங்க. குல தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுக்கும். உணவு விசயத்தில் கவனமாக இருங்க. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

வருமானம் அதிகமாகும், இடமாற்றம் தொழில் மாற்றம் நல்லதாக நடக்கும். நல்ல அனுபவங்களும், நன்மைகளும் நிறைந்த வாரம். திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள் நல்ல விசயங்கள் நிறைய நடக்கும்.