செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

மஹிந்த ராஜபக்ஸவின் அதிரடி அறிவிப்பு !

பகிர: Facebook WhatsApp X Telegram
கோட்டாபய அரசின் பிரதமராக மஹிந்த நியமனம்!

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த அரபு மத்ரஸாக்களில் படித்துக் கொடுக்கும் விடயதானங்கள் தொடர்பிலும் ஆய்வுக்குட்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தியதன் பின்னர், முஸ்லிம் விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றுடன் இணைந்து சரியான பரிந்துரைகளை தயார் செய்யுமாறும் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பௌத்த மத விவகாரம் மற்றும் கலாசார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் என்பவற்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்