திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
World

கொரோனா வைரஸ் மக்களை காப்பாத்தணும்!… 10 நிமிடத்தில் திருமணத்தை முடித்த மருத்துவர்

பகிர: Facebook WhatsApp X Telegram
கொரோனா வைரஸ் மக்களை காப்பாத்தணும்!… 10 நிமிடத்தில் திருமணத்தை முடித்த மருத்துவர்

சீனாவில் கொரோனா வைரசால் இதுவரையிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மருத்துவர் ஒருவர், தன்னுடைய திருமணத்தை வெறும் 10 நிமிடத்தில் முடித்துக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவமனை திரும்பியுள்ளார்.

அவரது பெயர் Li Zhiqiang, மருத்துவரான இவருக்கும் Yu Hongyan என்ற பெண்ணுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா வைரசால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனையில் பணி இருப்பதால் Li, தன்னுடைய திருமணத்தை மிக எளிதாக நடத்த முடிவெடுத்தார்.

இதன்படி கடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி வெறும் 10 நிமிடத்தில் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மணமக்களுடன் சேர்த்தே 5 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்தும் எவ்வித சடங்குகளும் மேற்கொள்ளப்படவில்லை, மணமக்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தக்கூடவில்லையாம்.

இச்செய்தி தற்போது வெளியாகி Li க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்