திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மாணவியிடம் இழிவாக நடந்துக் கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு பொதுமக்களால் நேர்ந்த கதி!

பகிர: Facebook WhatsApp X Telegram
மாணவியிடம் இழிவாக நடந்துக் கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு பொதுமக்களால் நேர்ந்த கதி!

கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த ஆசிரியர் ஒருவா் கிளிநொச்சி சிறுவர், பெண்கள் விவகாரங்களுக்கான பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் உள்ள பாரதிபுரம் கிராமத்திலுள்ள பாடசாலையில் வகுப்பறையில் வைத்து மாணவி ஒருவருடன் ஆசிாியர் ஒரு வா் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட மாணவி பெற்றோருக்கு சம்பவத்தை உடனடியாகவே கூறியிருக்கின்றார். பின்னர் பெற்றோர் பாடாலை அதிபரிடம் விடயத்தை கூறியிருக்கின்றனர்.

எனினும் பாடசாலை அதிபர் அதனை கவனத்தில் எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் ஆசிரியரை பிடித்து கவனிப்பின் பின் வகுப்பறைக்குள் வைத்து பூட்டியதுடன், பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறுவர், பெண்கள் விவகார பிாிவுக்கு முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பாடசாலைக்கு சென்ற பொலிஸார் ஆசிாியரை கைதுசெய்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்