செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்……

பகிர: Facebook WhatsApp X Telegram
எகிறிச்செல்லும் தங்கத்தின் விலை- காரணம் என்ன?

அமெரிக்க டொலருக்கு இணையாக தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், இன்றும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுணுக்கு 350 ரூபாயால் உயர்ந்து 72 ஆயிரத்து 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் விலையில் ஏற்படும் மாற்றம் சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதனடிப்படையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 78 ஆயிரத்து 800 ரூபாவாக இன்று விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 78 ஆயிரத்து 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்